எனக்காகவே எழுதப்பட்ட பாட்டா? விஜய்சேதுபதி பட இயக்குனர் ஆச்சரியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் ஒருசில பிரச்சனை காரணமாக அந்த படம் ரிலீஸ் எப்போது என படக்குழுவினர்களுக்கே தெரியவில்லை. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்த சீனுராமசாமி கூறியதாவது:
மானிதன் படத்தின் பாட்டு, "இது எனக்காகவே எழுதி இசைத்த பாட்டோ"? எனக்கேட்பவர்கள் நினைப்பர், நானும் அப்படியே நினைத்தேன், நல்வாழ்விற்காக உழைப்போருக்கு ஏக்கமின்றி, எதிர்ப்பார்பின்றி போகுமா? என குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவு செய்த ‘மாமனிதன்’ பாடல் இதுதான்:
நெனச்சதொன்னு நடந்ததொன்னு
ஏ ராசா
நீ கேட்டதொன்னு கிடைச்சதொன்னு
ஏ ராசா
ஆடி ஓடி அலைஞ்சதென்ன
ஏ ராசா
நீ உன்னத் தேடித்
தொலைச்சதென்ன
ஏ ராசா
வாழை ஒன்னு பாரமில்ல
வா லேசா
தன்னம்பிக்கை ஒண்ணே ஒண்ணு
போதாதா
ஓ சோகம் தீரும்
பாதை மற்றும்
வா ராசா
தன்னால எதுவும் இங்க
மாறப் போறதில்லை
முன்னால நீயும் எழுந்து
வா மெல்ல
யாரால ஆகுமுன்னு
மலைச்சு போயி
நின்ன
உன்னால எதுவும் முடியும்
வா முன்ன
எல்லாருக்கும் நேரம் வரும்
நல்லாருக்கும் காலம்
வரும்
மாற்றங்கள் தான் மாறாதது
உன் வாழ்க்கையும்
கை மாறுது
அப்பப்ப தெய்வமும்
குட்டி விடும்
அப்பத்தான் புத்தி வரும்
எண்ணங்கள் உன்னிடம்
சுத்தமென்றால்
வெற்றி உன்னைத்
சுற்றி வரும்
#மானிதன் படத்தின் பாட்டு, "இது எனக்காகவே எழுதி இசைத்த பாட்டோ" ?
— Seenu Ramasamy (@seenuramasamy) May 31, 2020
எனக்கேட்பவர்கள் நினைப்பர், நானும் அப்படியேநினைத்தேன்,
நல்வாழ்விற்காக உழைப்போருக்கு ஏக்கமின்றி,எதிர்ப்பார்பின்றி போகுமா? @VijaySethuOffl @thisisysr @pavijaypoet #ilaiyaraja @sreekar_prasad pic.twitter.com/URmyW3Yszk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com