கமல்ஹாசனால் தான் எனது படம் வெளியாகவில்லை: இயக்குனர் சீனுராமசாமி
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசனால் தான் தன்னுடைய ’இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் வெளியாகவில்லை என இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் உருவான கமல்ஹாசன் நடித்த ’உத்தம வில்லன்’ என்ற திரைப்படம் தங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது என்றும் அதற்கு பதிலாக கமல்ஹாசன் தங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து தருவதாக வாக்களித்து உள்ளார் என்றும் எனவே ’உத்தம வில்லன்’ திரைப்படம் லாபகரமான படம் என்று தவறான தகவல்களை பதிவு செய்ய வேண்டாம் என்று யூடியூப் சேனல் ஒன்றுக்கு இயக்குனர் லிங்குசாமி தரப்பில் இருந்து இன்று ஒரு அறிக்கை வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் உத்தமவில்லன் பிரச்சனை காரணமாகத்தான் லிங்குசாமி தயாரிப்பில் தனது இயக்கத்தில் உருவான ’இடம் பொருள் ஏவல்’ என்ற திரைப்படம் வெளியாகவில்லை என்று இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
திரு லிங்குசாமி அவர்கள் தயாரித்த ’இடம் பொருள் ஏவல்’ படம் அவர் தயாரித்த ’உத்தம வில்லன்’ படத்திற்கு முந்தி வந்திருக்க வேண்டிய படம், ஆனால் ’உத்தம வில்லன்’ முந்திவிட்டது. என் படம் நின்று விட்டது.
கமல் அண்ணன் வாக்கு தந்தால் அதை நிறைவேற்றுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் ஒப்பந்தப்படி நிச்சயம் திருப்பதி பிரதர்ஸ் கம்பெனிக்கு ஒரு படம் செய்வார் என நம்புறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
திரு @dirlingusamy
— Seenu Ramasamy (@seenuramasamy) April 18, 2024
அவர்கள் தயாரித்த
இடம் பொருள் ஏவல் படம் அவர் தயாரித்த
உத்தம வில்லனுக்கு முந்தி வந்திருக்க வேண்டிய படம்,
ஆனால்
உத்தம வில்லன் முந்திவிட்டது.
என் படம் நின்று விட்டது.
கமல் அண்ணன் @ikamalhaasan
வாக்கு தந்தால் அதை நிறைவேற்றுவார் என்பது
எல்லோருக்கும் தெரியும்.…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments