11 வருடங்களுக்கு முன்பே கமலுடன் மோதியவர் விஜய்சேதுபதி: சீனுராமசாமி

  • IndiaGlitz, [Friday,June 17 2022]

சமீபத்தில் வெளியான கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி அசத்தி இருப்பார் என்பதும் க்ளைமாக்ஸில் கமல், விஜய் சேதுபதி ஆகிய இருவருக்கும் இடையிலான சண்டை காட்சி மாஸாக இருக்கும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பதினோரு வருடங்களுக்கு முன்பே கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி மோதி உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

பதினோரு வருடங்களுக்கு முன்னர் அதாவது 2011ஆம் ஆண்டு கமல்ஹாசனின் ’மன்மதன் அன்பு’ வெளியான நாளில் தான் விஜய் சேதுபதி நடிப்பில் நான் இயக்கிய ’தென்மேற்கு பருவக்காற்று’ படம் ரிலீஸ் ஆனது என்றும் நாங்கள் இருவரும் பைக்கில் உதயம் தியேட்டர் முன் நின்று எங்கள் படத்திற்கு யாராவது டிக்கெட் எடுக்கின்றார்களா? என்பதை ஆர்வத்துடன் பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.

ஆனால் ’மன்மதன் அம்பு’ படத்திற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது என்றும் அந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் தான் ’தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை பார்த்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

பதினோரு வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் கட்-அவுட்டை பிரமிப்பாக பார்த்த விஜய் சேதுபதி இன்று கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

More News

சத்குரு கண்ணசைத்தவுடன் சமந்தா ஆடிய டான்ஸ்: வைரல் வீடியோ

சத்குரு கண்ணசைத்தவுடன் சமந்தா நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

இளையராஜா கச்சேரியில் வடிவேலு: வைரலாகும் செம வீடியோ

இசையுலகில் கின்னஸ் சாதனை செய்த இசைஞானி இளையராஜா தற்போதைய இளம் இசையமைப்பாளர்களுக்கு இணையாக பல திரைப் படங்களில் பணிபுரிந்து வருகிறார்.

'தளபதி 67' படத்தை அடுத்து மாஸ் நடிகருடன் இணையும் லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாநகரம்,

அடுத்தடுத்து இரண்டு முறை விஜய்யுடன் இணையும் பிரபுதேவா: ரசிகர்களுக்கு செம விருந்து!

தளபதி விஜய்யுடன் அடுத்தடுத்து இரண்டு முறை பிரபுதேவா இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் விஜய் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருப்பதை உறுதி செய்துள்ளது.

500 எடுத்தால் 2500: ஏடிஎம் மையத்தில் குவிந்த பொதுமக்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் 500 ரூபாய் எடுத்தால் 2500 ரூபாய் வருவதாக வெளி வந்த தகவலை அடுத்து அந்த ஏடிஎம் மையத்தில் பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.