அறம் படத்திற்காக நயன்தாராவுக்கு சல்யூட் அடித்த பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Monday,October 16 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள 'அறம்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் திரையிட திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் நவம்பர் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

'மெர்சல்' பரபரப்பு முடிந்த பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து கம்பீரமாக வெளிவரவுள்ள இந்த படத்திற்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பிரபல இயக்குனர் சீனுராமசாமி இந்த படத்திற்கு தற்போது பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'பதைபதைபோடும் நெகிழ்ச்சியோடும் தத்துவபலத்துடன் நான் பார்த்த இயக்குநர் கோபிநயினாரின் நேர்மையான படம் அறம். சகோதரி நயந்தாராவுக்கு ஸ்பெஷல் சல்யூட் என்று கூறியுள்ளார். இதில் இருந்தே இந்த படம் அனைவரும் விரும்பும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நயன்தாரா, விக்னேஷ், ரமேஷ், சுனுலட்சமி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மீஞ்சூர் கோபி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர்

More News

முதல்வர் - விஜய் சந்திப்பில் நடந்தது என்ன?

தளபதி விஜய் சற்று முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் விஜய் திடீர் சந்திப்பு

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்னும் இந்த படத்திற்கான பிரச்சனைகள் முழுவதும் தீர்ந்தபாடில்லை.

மீண்டும் காக்கி சட்டை அணிகிறாரா அஜித்?

அஜித் நடித்த சர்வதேச உளவாளி படமான 'விவேகம்' 50வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் தற்போது அவருடைய அடுத்த படமான 'அஜித் 58' படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

பிரச்சனையை சமாளிக்க 'மெர்சல்' குழுவின் கடைசிகட்ட அதிரடி நடவடிக்கை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. தமிழகத்தில் ஒருசில திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கிவிட்டது.

சந்தானம் படத்தில் கூடுதலாக 2 ஆக்சன் காட்சிகள் ஏன்: இயக்குனர் எம்.ராஜேஷ்

காமெடி நடிகரில் இருந்து ஆக்சன் ஹீரோவாக மாறியுள்ள சந்தானம் சமீபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் வழக்கறிஞர் ஒருவருடன் ரியல் ஆக்ச்னிலும் ஈடுபட்டார்.