விவசாயி உடலில் தேசியக்கொடி போர்த்தக்கூடாதா? கவுதமி மீது குற்றச்சாட்டு கூறிய இயக்குனர்..!
- IndiaGlitz, [Saturday,April 15 2023]
நடிகை கௌதமி உள்பட உறுப்பினர்களாக இருக்கும் சென்சார் போர்டு உறுப்பினர்கள் மீது இயக்குனர் ஒருவர் குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜா கணபதி, மேகா ஸ்ரீ, சுஷ்மிதா சென் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஏ படம்’. மாங்காடு அம்மன் மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சிவா கோ என்பவர் இயக்கி உள்ளார். அவர் இந்த படம் குறித்து கூறிய போது ’இந்த படத்தின் கதைப்படி நான் அம்பேத்கராக நடித்திருக்கிறேன். சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து என்ன சான்றிதழ் கொடுப்பது என்று தீர்மானிக்க முடியாமல் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினார்கள்
ரிவைசிங் கமிட்டியில் நடிகை கௌதமி உள்பட 15 பேர் கொண்ட குழுவினர் எங்கள் படத்தை பார்த்து சில தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என்றும் குறிப்பாக திருவள்ளுவர் படத்தை நீக்க வேண்டும் என்றும் கூறினர். மேலும் விவசாயி மரணத்திற்கு அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறக்க விட வேண்டும், விவசாயி இறந்த உடலில் தேசிய கொடி போர்த்த வேண்டும் என்பதெல்லாம் தவறு என்று கூறினர்
மேலும் படத்தில் 44 இடங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்று இயக்குனர் கூறியுள்ளார்.