'பட்டத்து அரசன்' பொத்தாரி கேரக்டர் உண்மையாகவே வாழ்ந்தவரா? இயக்குனர் சற்குணம் தகவல்

  • IndiaGlitz, [Friday,November 25 2022]

பிரபல இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ராஜ்கிரண் நடிப்பில் உருவான ’பட்டத்து அரசன்’ என்ற படம் வரும் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் ராஜ்கிரண் நடித்த பொத்தாரி என்ற கேரக்டர் நிஜமாகவே தஞ்சை பகுதியில் வாழ்ந்த ஒரு கபடி வீரர் என்று இயக்குநர் சற்குணம் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண், அதர்வா நடித்த திரைப்படம் ‘பட்டத்து அரசன்’. இந்த படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ராஜ்கிரண் கேரக்டரான பொத்தாரி குறித்து இயக்குனர் சற்குணம் தெரிவித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை பகுதியில் பிரபல கபடி வீரராக விளங்கியவர் பொத்தாரி என்றும் அந்த பகுதியில் அவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றும் அந்த கேரக்டரை தான் 'பட்டத்து அரசன்’ திரைப்படத்தில் ராஜ்கிரண் கேரக்டராக வைத்துள்ளேன் என்றும் இயக்குனர் சற்குணம் கூறியுள்ளார்.

கபடி வீரர் பொத்தாரி மிகவும் சிறப்பாக கபடி விளையாடுபவர் என்பதும் அவர் ஒவ்வொரு அணிக்கு ஏற்ற மாதிரி, ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ற மாதிரி தனது ஆட்டத்தின் பாணியை மாற்றிக் கொள்வார் என்றும், எந்த இடத்தில் அவர் எந்த பாணியில் விளையாடுவார் என்று யாராலும் யூகிக்க முடியாது என்பதால் அவர் இருக்கும் அணியை தோற்கடிக்க முடியாது என்றும் தான் கேள்வி பட்டதாக இயக்குனர் சற்குணம் தெரிவித்துள்ளார்.

அந்த கபடி வீரரை பெருமைப்படுத்தும் விதமாக தான் ராஜ்கிரண் கேரக்டருக்கு பொத்தாரி என்ற கேரக்டரை என்ற பெயரை வைத்துள்ளதாகவும் இருப்பினும் இது ஒரு பொத்தாரியின் கதை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தஞ்சை மாவட்டம் ஆம்லாபட்டு என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா, அப்பா, மகன், பேரன், மாமன், மச்சான் ஆகிய அனைவருமே ஒரே அணியில் கபடி விளையாடுவது பற்றி கேள்விப்பட்டேன் என்றும் அது என்னை பாதித்தது என்றும் இதனை அடுத்து நேரடியாக அவர்களிடம் சென்று பேசி அவர்களுடைய கதையை கேட்டு தெரிந்து கொண்டேன் என்றும் இயக்குனர் சற்குணம் தெரிவித்தார். மேலும் அவர்கள் சொன்ன விஷயத்தையும் எனது கற்பனையையும் சேர்த்து ஒரு திரைக்கதையை உருவாக்கினேன் என்றும் அதுதான் ’பட்டத்து அரசன்’ கதை என்றும் இயக்குனர் சற்குணம் தெரிவித்துள்ளார்.