'கொலை விழுக போவுது'. ஜல்லிக்கட்டுக்காக பிரபல இயக்குனர் எழுதிய கவிதை
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் போராட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் ஆளும் அரசுகள் திணறி வருகின்றன. குறிப்பாக இந்த போராட்டத்தில் திரையுலகினர் குதித்த பின்னர் இன்னும் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் களவாணி,வாகை சூட வா போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சற்குணம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கவிதை ஒன்றை எழுதி அதை வீடியோ வடிவிலும் வெளியிட்டுள்ளார்.
அந்த கவிதை இதோ:
மாடு புடிக்கப் போறோம்டா ..
நாங்க மல்லுக்கட்ட வாறோம்டா ..
மாடு புடிக்கப் போறோம்டா ..
நாங்க மல்லுக்கட்ட வாறோம்டா..
திமிரோடு இருக்கோம்டா..
நாங்க திமில புடிக்கப் போறோம்டா..
திமிரோடு இருக்கோம்டா..
நாங்க திமில புடிக்கப் போறோம்டா..
மாட்டுக்கு பொங்க வச்ச மனுசப் பய..
எங்கள நீ கொம்பு சீவி விட்டுட்ட..
எங்க கொலத்த அழிக்கப் பாத்துட்ட..
எங்கள கொம்பு சீவி விட்டுட்ட..
கொலத்த அழிக்கப் பாத்துட்ட..
எங்க கொல சாமிய..
இறக்குவோண்டா களத்துல..
ஏந்துவோண்டா நெஞ்சில..
வாடிவாச பக்கங் கூட வந்ததில்ல நீங்க..
வைக்க புல்லு எல்லாம் போட்டு வளர்த்தவங்க நாங்க..
நாங்க பொங்க வச்சி ஊட்டுவோம்..
வீட்டில் போட்டா எடுத்து மாட்டுவோம்..
இதுக்கு மேல நெருக்குனா இனி யாருன்னு காட்டுவோம்..
இப்போ கொழுந்து விட்டு எரியிது..
இனி கொல விழுகப் போகுது”
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com