பிக்பாஸ் ஜூலிக்கு இயக்குனர் சமுத்திரக்கனியின் முக்கிய அறிவுரை

  • IndiaGlitz, [Saturday,October 14 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து ஆரவ், இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒருசிலர் உச்சகட்ட புகழையும், ஒருசிலர் இருக்கும் புகழை இழந்தும் உள்ளனர். அந்தவகையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த புகழை இழந்தது மட்டுமின்றி அதிகபட்ச நபர்களால் வெறுக்கப்படும் ஒரு நபராக ஜூலி உள்ளார்.

இவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அவருக்கு ஓவியா ஆர்மியினர் அதிரடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்ட சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி ஜூலிக்கு ஒரு முக்கிய அறிவுரை செய்தார்.

அது ஜூலி சில நாட்கள் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு அவர் இருந்தால் மக்கள் மறந்துவிடுவது மட்டுமின்றி மன்னித்தும் விடுவார்கள் என்றும் கூறினார். ஆனால் இந்த அறிவுரையை ஜூலி பின்பற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

எங்களுக்கு கட்டளையிட விஷால் யார்? அபிராமி ராமநாதன்

தியேட்டர்களில் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், படம் பார்க்க வருபவர்களின் செலவுகளை குறைக்கவும் நேற்று விஷால் சில கருத்துக்களை தெரிவித்தார். 

உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் தயாரிப்பாளர், விஷால் இயக்குனர்

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்து முடித்துள்ள 'இப்படை வெல்லும்' திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வரவுள்ளது.

நயன்தாராவின் 'அறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தாலும் புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற கட்டுப்பாடு காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

காயத்ரி என்னை குழந்தை மாதிரி பார்த்து கொண்டார்: ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வெற்றியாளரான ஓவியாவுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் குவிந்து கொண்டே இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஓவியாவின் கேரக்டர் கோடியில் ஒருவருக்கே இருக்கும் என்பதை

நவம்பர் 3-ல் ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்து தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தமிழக அரசின் கேளிக்கை வரி 10 சதவிகிதத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்தது.