எஸ்பிபிக்காக முக்கிய வேண்டுகோள் விடுத்த தளபதி விஜய்யின் தந்தை!
- IndiaGlitz, [Wednesday,August 19 2020]
பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் குணமடைய வேண்டும் என்று திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு துறையினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன்னர் தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகரன் அவர்கள் வீடியோ ஒன்றில் எஸ்பிபி விரைவில் குணமாக தான் இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது வீடியோவில் கூறியிருப்பதாவதுள்.
என் அன்பு மகன் விஜய்யின் நெஞ்சில் குடியிருக்கும் பாசமிக்க ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். இசைமேதை எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இருக்கும் நிலைமை குறித்து அனைவரும் அறிந்ததே. ரொம்ப கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் டாக்டர்களை விட மிஞ்சிய ஒரு சக்தி இறைசக்தி. இறைவன் இருக்கின்றான். இறைவனால் எதையும் செய்ய முடியும். நாம் அனைவரும் பிரார்த்தனை செய்தால் அவர் குணமாகிவிடுவார்.
ஆயிரம் நிலவே வா என ஆயிரம் நிலவை தனது குரலால் கூப்பிட்ட எஸ்பிபி லட்சம் நிலாவை கூப்பிட வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பிரார்த்தனை செய்தால் நிச்சயம் அவர் குணமாகிவிடுவார்.
உலகமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் எஸ்பிபியின் குரலை மீட்க ஒரே குரலாக இறைவா எஸ்பிபி குரலை மீண்டும் அழைத்து வா’ என்று நாம் அனைவரும் பிரார்த்தனை செய்தால் கண்டிப்பாக அவர் மீண்டு வருவார் என்று நான் நம்புகிறேன் என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.
Director S.A.Chandrasekar's Humble Request #GetWellSoonSPB pic.twitter.com/T0n0rA1kwY
— Diamond Babu (@idiamondbabu) August 19, 2020