ஆர்.கே.நகர் தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கம்' ஆதரவு யாருக்கு? எஸ்.ஏ.சி பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய்யின் 'விஜய் மக்கள் இயக்கம்' அவ்வப்போது அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருவதால், இந்த இயக்கம் ஒவ்வொரு தேர்தலின்போதும் யாருக்கு ஆதரவு என்கிற நிலையை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி பேட்டி ஒன்றில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த பேட்டியில் எஸ்.ஏ.சி கூறியதாவது: 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர விரும்பினேன். அதில் அதிக ஆர்வம் காட்டினேன். நடிகர் என்பதால் அரசியலில் புகழ் பெற முடியும், அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைத்தேன். காலப்போக்கில் அரசியல் சுத்தப்படுத்த முடியாத சாக்கடை என்பதை உணர்ந்தேன்.
தற்போது தமிழகத்தில் எப்படிப்பட்ட அரசியல் உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். இதுபோன்ற அரசியலை பார்த்தது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது மகன் அரசியலுக்கு வர நான் விருப்பப்படவில்லை. விஜய் அரசியலுக்கு வரமாட்டார்.
விஜய்யின் மக்கள் இயக்கம், அரசியலில் ஈடுபடாததால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது' இவ்வாறு எஸ்.ஏ.சி கூறினார்.
சமீபத்தில் இதே முடிவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments