காவல்துறைக்கு 3 வேளை உணவு, தங்குவதற்கு 8 ஓட்டல்கள் கொடுத்த பிரபல இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர் ஆகியோர்களுக்கு அரசும் தனியார் அமைப்புகளும், திரையுலக பிரபலங்களும் பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர் என்பதும், தன்னலம் கருதாது உயிரை பணயம் வைத்து பணி செய்யும் இவர்கள் தற்போது கடவுளுக்கு சமமாக மதிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் மும்பையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்குவதற்கு தனக்கு சொந்தமான 8 ஓட்டல்களையும் பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி அவர்கள் வழங்கியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து மும்பை போலீஸ் தனது டுவிட்டர் தளத்தில் நன்றி கூறியுள்ளது.
ஏற்கனவே பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார் என்பதும் அதேபோல் பிரபல வில்லன் நடிகர் சோனுசூட் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் ஓய்வெடுக்க தனக்கு சொந்தமான மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது 6 மாடி ஓட்டலை வழங்கினார் என்பதும் தெரிந்ததே.
#RohitShetty has facilitated eight hotels across the city for our on-duty #CovidWarriors to rest, shower & change with arrangements for breakfast & dinner.
— Mumbai Police (@MumbaiPolice) April 21, 2020
We thank him for this kind gesture and for helping us in #TakingOnCorona and keeping Mumbai safe.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments