காவல்துறைக்கு 3 வேளை உணவு, தங்குவதற்கு 8 ஓட்டல்கள் கொடுத்த பிரபல இயக்குனர்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர் ஆகியோர்களுக்கு அரசும் தனியார் அமைப்புகளும், திரையுலக பிரபலங்களும் பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர் என்பதும், தன்னலம் கருதாது உயிரை பணயம் வைத்து பணி செய்யும் இவர்கள் தற்போது கடவுளுக்கு சமமாக மதிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மும்பையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்குவதற்கு தனக்கு சொந்தமான 8 ஓட்டல்களையும் பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி அவர்கள் வழங்கியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து மும்பை போலீஸ் தனது டுவிட்டர் தளத்தில் நன்றி கூறியுள்ளது.

ஏற்கனவே பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார் என்பதும் அதேபோல் பிரபல வில்லன் நடிகர் சோனுசூட் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் ஓய்வெடுக்க தனக்கு சொந்தமான மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது 6 மாடி ஓட்டலை வழங்கினார் என்பதும் தெரிந்ததே.
 

More News

மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு விவகாரம்: பா.ரஞ்சித் கருத்து

சமீபத்தில் கொரோனா பாதிப்பு அடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை செய்த சென்னை மருத்துவர் சைமன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதும், அவருடைய உடலை அடக்கம் செய்ய கூட பொதுமக்கள் எதிர்ப்பு

நீண்ட தூக்கத்தில் இருந்து திரும்பிவிட்டேன்: சமந்தா

கொரானோ ஊரடங்கு விடுமுறையில் கோலிவுட் பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் ஜாலியான, சீரியஸான வீடியோக்கள், புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்

ஊருக்குதான் உபதேசமா? ஆளுங்கட்சியினர்களின் அடாவடியை தட்டி கேட்கும் கஸ்தூரி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அழிவின்றி வாழ்வது நம்‌ அறிவும்‌ அன்புமே: கமல்ஹாசனின் 'நம்பிக்கை' பாடல் வரிகள்

கொரோனா தொற்றினால் அச்சம் அடைந்திருக்கும் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கமல்ஹாசன் ஒரு பாடல் எழுதியிருப்பதாகவும், 'அறிவும் அன்பும்' என்று தொடங்கும்

மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா: சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக நேற்று மட்டும் தமிழகத்தில் 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்