பிரபல இரட்டை இயக்குனர்களில் ஒருவர் காலமானார்.

  • IndiaGlitz, [Friday,November 30 2018]

தமிழ் சினிமாவில் மிக அரிதாக இருந்த இரட்டை இயக்குனர்களில் ராபர்ட்-ராஜசேகர் குறிப்பிடத்தக்கவர்கள். கல்யாண காலம், ஒரு தலைராகம், மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே மெல்லப்பேசு உள்பட பல வெற்றி திரைப்படங்களை இந்த இரட்டை இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த இரட்டை இயக்குனர்களில் ஒருவராக ராபர்ட் இன்று காலை 10 மணியளவில், சென்னை பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். இயக்குனர் ராபர்ட் மறைவிற்கு கோலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.