விஜயகாந்த்தை கொன்றவர்களை கண்டுபிடியுங்கள்.. உதயநிதிக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல இயக்குனர்..!

  • IndiaGlitz, [Thursday,December 28 2023]

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில் விஜயகாந்தை கொலை செய்தவர்களை கண்டுபிடிங்கள் என அமைச்சர் உதயநிதியை டேக் செய்து பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அல்போன்ஸ் புத்திரன், அதன்பின்னர் ‘பிரேமம்’ ’கோல்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த் மறைவு குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதியை டெக் செய்துள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பதிவில், ‘நான் உங்களை கேரளாவில் இருந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் அலுவலகத்தில் சந்தித்தபோது நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறினேன். அதேபோல் கருணாநிதி, ஜெயலலிதாவை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறினேன். இப்போது விஜயகாந்த்தை கொன்றவர்களையும் நீங்கள் சேர்த்து கண்டுபிடிக்க வேண்டும்.

ஏற்கனவே முதலமைச்சர் முக ஸ்டாலின், ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் கமல்ஹாசன் ஆகியோர்களை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இதை இப்படியே விட்டுவிட்டால் உங்களுக்கும் ஆபத்தாக அமையும். கொலையாளர்களை கண்டுபிடிப்பது உங்களுக்கு பெரிய வேலை இல்லை’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Immerse Yourself in the Melodies of Vijayakanth!

Dive into the soulful tunes and timeless classics by Vijayakanth. Click the link below to access a curated compilation of his greatest hits!

Listen Now