'அயலான்' இயக்குனரின் வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!
- IndiaGlitz, [Sunday,March 21 2021]
விஷ்ணு விஷால் நடித்த ’இன்று நேற்று நாளை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தற்போது ’அயலான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருபவர் இயக்குனர் ரவிக்குமார். சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இயக்குனர் ரவிக்குமாரின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமாகி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை ரவிக்குமாரின் நெருங்கிய நண்பரும் இயக்குனருமான கவுர்வ் நாராயணன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
இதனை அடுத்து இயக்குனர் ரவிக்குமாருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் ரவிக்குமார் வீட்டில் நடந்த இந்த சோக சம்பவம் ’அயலான்’ படக்குழுவினர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.