நடக்காத சம்பவத்தை நீங்கள் நேரில் கண்டேன் என்று சொல்வதா? 'அயலான்' இயக்குனர் கண்டனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடக்காத சம்பவத்தை நேரில் கண்டேன் என்று கூறுவது மிகப் பெரிய அவதூறு என யூடியூப் சேனல் ஒன்றுக்கு ‘அயலான்’ இயக்குனர் ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், இயக்குனர் ரவிக்குமாரை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தபோது, சீமானை அவமரியாதையாக இயக்குனர் ரவிகுமார் நடத்தியதாக கூறப்பட்டிருந்தது. இந்த தகவல் இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து இயக்குனர் ரவிக்குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியதே இல்லை. அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது. ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் யாரிடமும் அலட்சியமாக நடந்துகொள்பவன் அல்ல. நடக்காத சம்பவத்தை நீங்கள் நேரில் கண்டேன் என்று சொல்வது மிக பெரிய அவதூறு. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொய்யான செய்திகளை பரப்பவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
‘நேற்று இன்று நாளை’ என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ரவிகுமார் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#valaipechu நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியதே இல்லை. அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது. ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் யாரிடமும் அலட்சியமாக நடந்துகொள்பவன் அல்ல.
— Ravikumar R (@Ravikumar_Dir) March 17, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout