அடுப்பு பற்றவைக்கவே வசதியில்லை, விளக்கேற்றுவது எப்படி? 'மாஸ்டர்' பட பிரபலம்
- IndiaGlitz, [Friday,April 03 2020]
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசிய போது ’கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் என்றும், இதேபோல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை சமூக விலகலை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்
மேலும் வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த வேண்டுகோள் குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’மேயாத மான்’ ’ஆடை’ ஆகிய படங்களை இயக்கியவரும் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’படத்தில் பணிபுரிந்தவருமான இயக்குனர் ரத்னகுமார் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது: வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளார். ரத்னகுமாரின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது??. #COVID2019india #April5
— Rathna kumar (@MrRathna) April 3, 2020