முழுக்க முழுக்க விஜய்சேதுபதியிஸம்: 'சிந்துபாத்' படத்தின் முதல் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்சேதுபதி, அஞ்சலி நடித்த 'சிந்துபாத்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முன்பதிவுகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நவீன ராமாயண கதை என ஏற்கனவே விஜய்சேதுபதி இந்த படத்தின் கதை குறித்த ஒரு குறிப்பை தெரிவித்திருக்கும் நிலையில் மனைவியை வில்லனிடம் இருந்து மீட்கும் ஆக்சன் கதைதான் இந்த படத்தின் கதை என தெரிய வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை கடந்த வாரமே பார்த்த 'ஆடை' பட இயக்குனர் ரத்னகுமார் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் சுருக்கமான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். மனைவியை தேடி கடல் கடந்து, தடைகள் கடந்து எதிரிகளை துவம்சம் செய்யும் மரணமாஸ் படம்தான் சிந்துபாத்' என்றும், கடந்த வாரமே இந்த படத்தை தான் பார்த்தது தனது அதிர்ஷ்டம் என்றும், நீண்ட நாட்களுக்கு பின் முழுக்க முழுக்க விஜய்சேதுபதியிஸம் கொண்ட ஒரு படம் என்றும் இயக்குனர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.
மனைவியை தேடி கடல் கடந்து, தடைகள் தாண்டி எதிரிகளை துவம்சம் செய்யும் மரண மாஸ் படமே சிந்துபாத். Fitting way to get released after all Struggle. Lucky to see this film Last week. Get ready folks. Pure Vijay Sethupathyism after a long time.#Sindhubaadh All the best @vijaykartik_k ???? pic.twitter.com/ddAdaD5xrG
— Rathna kumar (@MrRathna) June 25, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com