ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட 'மாஸ்டர்' படத்தின் பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ‘மாஸ்டர்’ படத்தின் இரண்டாவது லுக் வெளிவரவுள்ளது என்பது தெரிந்ததே. பொங்கல் திருநாளான இன்று இந்த போஸ்டரை வரவேற்க விஜய் ரசிகர்கள் தயாராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சற்று முன்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் தனது பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த போஸ்டரில் லோகேஷ் கனகராஜ், அனிருத், ஸ்டண்ட் சில்வா, நாயகி மாளவிகா மோகனன் உள்பட படக்குழுவினர் பலர் உள்ளனர்.
ஆனால் இந்த போஸ்டரில் தளபதி விஜய் இல்லையே என்று விஜய் ரசிகர்கள் இடையே அதிருப்தி இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதையை ஆசிரியர்களில் ஒருவரான இயக்குனர் ரத்னகுமார் இதுகுறித்து விளக்கம் அளித்தபோது ’தளபதியின் புகைப்படம் இல்லையே என யாரும் திட்ட வேண்டாம், வருகிறார் இன்று மாலை 5 மணிக்கு அட்டகாசமாக வருகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் சற்று சமாதானம் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ??. Thalapathy photo la illaye nu yaarum thitta vendam. Varaar today evening at 5pm.??.#MasterSecondLook #Master https://t.co/LOx7mxgKdF
— Rathna kumar (@MrRathna) January 15, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments