போராடிதான் ஒவ்வொரு உரிமையையும் பெற முடியும்: ரஜினி இயக்குனர் ரஞ்சித் பேட்டி

  • IndiaGlitz, [Thursday,May 31 2018]

எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்று நேற்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில் அவர் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித், 'ஒவ்வொரு உரிமையையும் போராடித்தான் பெற முடியும் என்று சற்றுமுன் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இயக்குனர் ரஞ்சித் செய்தியாளர்களிடம் பேசியபோது, போராட்டம் வேண்டாம் என்று கூறுவது ரஜினியின் சொந்த கருத்து. நானும் இப்போது போராட்டத்தில் தான் இருக்கின்றேன். போராட்டத்தின் மூலம் தான் நம்முடைய பிரச்சனைகள் தீரும் என்று கூறினார்.

மேலும் ரஜினிகாந்த் போராட்டமே வேண்டாம் என்று கூறவில்லை, நான் இன்று காலையில் அவரிடம் பேசியபோது போராட்டங்கள் நடக்கும்போது ஏற்படும் அசம்பாவிதங்களால் அதன் வலி அதிகம் ஏற்படுகிறது என்ற வருத்தத்தை அவர் என்னிடம் தெரிவித்தார்.

போராட்டமே கூடாது என்றால் நான் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு உரிமையையும் போராடித்தான் பெறமுடியும் என்று கூறினார்.

More News

டுவிட்டரில் ரஜினியை கிண்டலடித்தாரா சித்தார்த்?

தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்த ரஜினிகாந்த் பின்னர் பேட்டியளித்த போது, 'தூத்துகுடியில் சமூக  விரோதிகள் ஊடுருவியதே போராட்டம் கலவரமாக மாற காரணம்

ரஜினிக்காக குரல் கொடுத்த விஷால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் தடை விதித்துள்ளது.

ரஜினியை தேச துரோக சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: சரத்குமார் ஆவேசம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு பண உதவியும் செய்தார்.

அடல்ட் காமெடி பட இயக்குனரின் முதல் 'யூ' படம்

'ஹரஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு 'ஏ' சான்றிதழ் அடல்ட் காமெடி படங்களை இயக்கி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய நடிகை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகம் அடுத்த மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ளது