'அயோத்தி' தீர்ப்பு குறித்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் கருத்து
- IndiaGlitz, [Sunday,November 10 2019]
இந்தியாவே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு நேற்று காலை வெளியானது. இந்த தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக வந்தாலும் இஸ்லாமியர்களுக்கும் மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததால் இரு தரப்பினர்களும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய போவதில்லை என்றும், தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் நேற்று வக்ஃபு வாரியம் அறிவித்திருந்தது என்பது இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுவிட்டதாகவே கருதப்படுகிறது.
இந்த தீர்ப்பை பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டினர். இருப்பினும் ஒருசில அரசியல்வாதிகளுக்கு இந்த தீர்ப்பு ஏமாற்றமாக இருந்தது. இந்த தீர்ப்பை வைத்து அரசியல் செய்யலாம் என்று காத்திருந்த அவர்களுக்கு, தீர்ப்புக்கு நாடு அமைதியாக இருந்ததும் ஏமாற்றமகத்தான் இருந்திருக்கும். இருப்பினும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் முடிந்தவரை பிரச்சனையை உருவாக்க ஒருசில சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக வலைத்தளத்தில், ‘ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்... “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரஞ்சித்தின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்களின் ரியாக்சன் என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்... “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???”
— pa.ranjith (@beemji) November 10, 2019