வாழ்த்து சொன்ன பிரபல நடிகரை வறுத்தெடுத்த ரஞ்சித்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நீட் தேர்வை எதிர்த்து தன்னுடைய இன்னுயிரை நீத்த அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று இயக்குனர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது என்பதை பார்த்தோம். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் அமீர் மற்றும் ரஞ்சித் ஆகியோர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் இணக்கமான சூழலும் உருவானது
இந்த நிகழ்ச்சியில் 'இன்னும் எத்தனை நாட்களுக்கு தமிழன், தமிழன் என்று சொல்லிக் கொண்டிருப்பீர்கள், ஜாதியால் நாம் பிரிந்துள்ளோம் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்' என்று ஆவேசமாக ரஞ்சித் கூறினார்.
இந்த நிலையில் இதுகுறித்து பிரபல நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் கருத்து கூறுகையில் 'தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித். ஜாதியை பெருமையாக சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்' என்று கூறியுள்ளார்.
எஸ்.வி.சேகரின் இந்த டுவீட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் ரஞ்சித் தனது டுவிட்டரில், 'தலித் என்பது சாதியல்ல, ஆரியம்-சாதியம் ஒழிக்கும் விடுதலைக் கருத்தியல்' என்று கூறியுள்ளார்.
இதற்கு மீண்டும் கருத்து கூறியுள்ள எஸ்.வி.சேகர், '"தம்பி தலித் என்று சொன்னது நீங்கள் தான். ஆரியம்-சாதியம் ஒழிக்கும் விடுதலை கருத்தியல்."நடைமுறை சாத்தியமில்லா கருத்தியல். காலம் உணர்த்தும். வெற்றி வேகம் தங்களின் பதில். வயதும் அனுபவமும் கூடக்கூட தெளிவு பெறுவீர்கள்.என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார்' என்று கூறினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments