ராகுல்காந்தியை சந்தித்த ரஜினி பட இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என கருதப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியல் தலைவர்கள் ராகுல்காந்தியை சந்திப்பதில் ஆர்வம் கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதன் பின்னர் நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் ராகுல் காந்தியை அடுத்தடுத்து சந்தித்தனர். இந்த நிலையில் திமுகவின் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள ராகுல்காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கும் இயக்குனர் ரஞ்சித், நேற்று ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது திரைப்படங்கள், அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை ரஞ்சித்திடம் விவாதித்ததாக ராகுல்காந்தி, தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின்போது நடிகர் கலையரசனும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout