இயக்குனர் ரஞ்சித் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகிய பா.ரஞ்சித் அவர்களின் தந்தை பாண்டுரங்கன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 63.

மறைந்த பாண்டுரங்கன் அவர்களின் உடல் திருவள்ளூர் அருகேயுள்ள அவரது சொந்த ஊரான கரலம்பாக்கம் என்ற பகுதியில் இன்று நல்லடக்கம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ரஞ்சித் தந்தை மறைவிற்கு திரையுலகினர் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அட்டக்கத்தி என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன்பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.