கையில் சிகரெட், நடிகையுடன் நைட் பார்ட்டி.. வேற லெவல் பட புரமோஷனில் பிரபல இயக்குனர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் தனது படத்தில் நடித்த நடிகையுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு கையில் சிகரெட் உடன் இருக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து இந்த படத்தின் புரமோஷனில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களை தயாரித்து, இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் ’வியூகம்’ என்ற படத்தை இயக்கி முடித்த நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகியுள்ளது.
முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் அகால மரணம் மற்றும் அவரது மரணத்திற்கு பின் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆனது ஆகியவை குறித்த கதை அம்சம் கொண்டது தான் இந்த படம் என்று கூறப்படுகிறது. நடிகர் அஜ்மல் அமீர் ஜெகன் மோகன் ரெட்டி கேரக்டரிலும் மானசா ராதாகிருஷ்ணன் ஒய்எஸ் பாரதி என்ற கேரக்டர்களில் நடித்திருப்பதாக தெரிகிறது .
இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் நாயகி உடன் இரவு பார்ட்டியில் கையில் சிகரெட் உடன் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு ’வியூகம்’ படத்தின் புரமோஷனில் இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Me and https://t.co/iySUKHKMHM… celebrating VYOOHAM release on Feb 23rd 💃💃💃💪💪💪🔥🔥🔥💐💐💐😎😎😎 pic.twitter.com/ENnCtyyV7N
— Ram Gopal Varma (@RGVzoomin) February 8, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com