போலீஸ் கஸ்டடியில் பிரபல இயக்குனர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற, மக்களவை தேர்தல் சமீபத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தான் இயக்கிய 'லட்சுமியின் என்.டி.ஆர்' என்ற படத்தை வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்
இந்த படத்திற்கான பிரஸ்மீட் நேற்று விஜயவாடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரஸ்மீட்டில் கலந்து கொள்ள ஐதராபாத்தில் இருந்து விஜயவாடாவிற்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா செல்ல முயன்றபோது, விஜயவாடாவிற்குள் நுழையும் முன்பே ஆந்திர போலீசார் அவரை கஸ்டடியில் எடுத்து மீண்டும் ஐதராபாத் திரும்ப அவரை வற்புறுத்தியுள்ளனர். இதனால் நேற்று நடைபெறவேண்டிய பிரஸ்மீட் ரத்து செய்யப்பட்டது
இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'ஆந்திராவில் ஜனநாயகம் இல்லை. உண்மையை சொல்ல முயற்சித்த என்னை போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளனர். என்னுடைய சமூக வலைத்தள பக்கங்களும் தடுக்கப்பட்டுள்ளதால் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை' என்று ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
Just see the number of police escorting me out of Vijaywada as if I am the biggest criminal ever and my only crime is telling all the backstabbing truths behind #LakshmisNTR pic.twitter.com/5zCqLnXpzj
— Ram Gopal Varma (@RGVzoomin) April 28, 2019
JAI TDP DEMOCRACY ?????? pic.twitter.com/8LPFGQx3am
— Ram Gopal Varma (@RGVzoomin) April 28, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com