மதுபானம் வாங்க பெண்கள் வரிசை: பிரபல இயக்குனர் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடு முழுவதும் இன்று மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஒரு சில தளர்வுகளை அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. அதில் முக்கியமான ஒன்று மதுக் கடைகளைத் திறக்கலாம் என்றும் சமூக இடைவெளியை மது வாங்க வருபவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் மது பார்களை திறக்க அனுமதி இல்லை என்றும் மதுபானங்களை வாங்கி வீட்டில் சென்று குடிக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.
இதனை அடுத்து தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இதனை அடுத்து மூன்று மாநிலங்களிலும் மதுபானங்கள் வாங்க பொதுமக்கள் முண்டியடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 40 நாட்களாக மதுபானங்கள் வாங்காத நிலையில் இன்று திடீரென ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு மதுபான கடைகள் முன்பும் மதுப்பிரியர்கள் குவிந்ததால் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு மதுபான கடையின் முன் இளம் பெண்கள் சிலர் மதுபானங்கள் வாங்க வரிசையில் நின்றிருந்த தகவல் சமூக வலை தளங்களில் வைரலானது. இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகின.
இந்த நிலையில் இது குறித்து பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது ’இங்கே பாருங்கள் மதுபான கடைகள் முன் யார் நிற்கிறார்கள் என்று? இன்னமும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களை காப்பாற்ற வேண்டும் என்று நாம் பேசி வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மாவின் இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Look who’s in line at the wine shops ..So much for protecting women against drunk men ?? pic.twitter.com/ThFLd5vpzd
— Ram Gopal Varma (@RGVzoomin) May 4, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com