ரஜினியை கிண்டல் செய்ய நினைத்து சிக்கலில் மாட்டிய பிரபல இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டது என்பதும், இதனை அடுத்து ரஜினிகாந்த் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கயா நாயுடு, பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆளுநர் கே.என்.ரவி உள்பட பல அரசியல் பிரபலங்களும் தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி இந்திய திரையுலகினர் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்று கூறிக்கொள்ளும் ஒரு சிலர் வாழ்த்து தெரிவிக்காததையும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் அவர்களை கிண்டல் செய்ய நினைத்து சிக்கலில் மாட்டிக் கொண்ட பிரபல இயக்குனர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா அவர்கள் ரஜினிகாந்துக்கு துணை குடியரசு தலைவர் தாதாசாகேப் பால்கே விருது கொடுத்தது குறித்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்து, ‘தாதாசாகேப் பால்கேவுக்கு ரஜினிகாந்த் கொரியர் மூலம் விருதை கொடுத்தார் என்று பதிவு செய்துள்ளார்
இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ரஜினியை கிண்டல் செய்வதாக நினைத்து கொண்டு துணை குடியரசுத் தலைவரை அவமரியாதையாக பதிவு செய்திருப்பதாக கண்டனங்கள் குவிந்து வருகிறது. துணை குடியரசு தலைவர் பதவி என்பது மதிப்பும் மரியாதையும் மிக்க ஒரு பதவியாக இருக்கும் நிலையில் அவரை கொரியர் மேன் என்று கூறியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே பல்வேறு சர்ச்சைக்குரிய பதிவுகளை செய்துள்ள ராம்கோபால்வர்மா, ரஜினியை கிண்டல் செய்ய நினைத்து துணை குடியரசுத் தலைவரை அவமதிப்பு பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Here is @rajinikanth giving award to Dada saheb Phalke through a courier man pic.twitter.com/AxKkre4Aay
— Ram Gopal Varma (@RGVzoomin) October 25, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments