நான் இறந்தவுடன் என்னை ஸ்ரீதேவி கல்லறை அருகே புதைத்துவிடுங்கள்: பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,December 27 2019]

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஒருவர் தான் இறந்தவுடன் தன்னுடைய உடலை ஸ்ரீதேவி கல்லறை அருகே புதைத்து விடுங்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி அவர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எதிர்பாராதவிதமாக துபாயில் மரணம் அடைந்தார். அவருடைய மரணம் இந்திய திரை உலகையே உலுக்கிய நிலையில் அவரது மரணம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்த பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஸ்ரீதேவி மரணம் அடைந்துவிட்டார் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் இதனை யாராவது கெட்ட கனவு என்று சொல்லுங்கள் என்று கூறியிருந்தார். மேலும் கடவுள் பெருமாளிடம் ஸ்ரீதேவியை எடுத்துக் கொண்டு என்னை மட்டும் ஏன் விட்டு விட்டீர்கள்? என்பது போன்ற பதிவுகளையும் அவர் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களிடம் உரையாடிய இயக்குனர் ராம்கோபால் வர்மா ’தான் இறந்தவுடன் தன்னுடைய உடலை ஸ்ரீதேவி கல்லறை அருகே புதைக்க வேண்டும் என்பது தான் தன்னுடைய ஆசை என்றும் கூறியிருந்தார். அதேபோல் தனது வாழ்க்கையின் கடைசி ஒரு மணி நேரத்தை ஸ்ரீதேவி கல்லறையில் இருக்க விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். ஸ்ரீதேவி குறித்து ராம்கோபால் வர்மா கூறியுள்ள இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

பேய் பிடித்தவர்களை குணப்படுத்த, மருத்துவர்களுக்கு புதிய பாடப்பிரிவு..! பனாரஸ் பல்கலைக்கழகம்.

பேய் பிடித்தவர்களை குணப்படுத்த மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கும் புதிய பாட பயிற்சி திட்டத்தை பனாரஸ் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

பாரதிராஜாவின் 'குற்றப்பரம்பரை' படம் குறித்த முக்கிய தகவல்!

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் கனவு திரைப்படம் என்று கூறப்படும் 'குற்றப்பரம்பரை' திரைப்படத்தின் பூஜை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உசிலம்பட்டி அருகே

இசை ஞானி இளையராஜாவிற்கு கேரள அரசு அறிவித்த புதிய விருது..!

கேரள மாநிலத்தில் ஹரிவராசனம் பாடலின் பெயரில் 2012-ம் ஆண்டு முதல் 'ஹரிவராசனம் விருது' வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, இசைஞானி இளையராஜாவிற்கு விருது வழங்கப்படுகிறது.

முதல்முறையாக இணையும் கவுதம்மேனன் மற்றும் விஷ்ணுவிஷால்!

இயக்குனர் கவுதம்மேனன் இயக்கிய 'என்னை நோக்கி பாயும் தோட்டா' சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் இயக்கிய 'குயீன்' என்ற வெப்சீரிஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

கட்டிடத்தில் மோதி விமானம் விபத்து: 100 பயணிகளின் கதி என்ன?

கஜகஸ்தான் நாட்டில் 100 பேர்களுடன் சென்ற விமானம் ஒன்று கட்டிடம் ஒன்றில் மோதியதால் ஏற்பட்ட விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது