ரஜினி, விஜய் ரசிகர்களின் கொந்தளிப்பால் வருத்தம் தெரிவித்த பிரபல இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக்கொண்டது இந்திய அளவில் டிரெண்ட் ஆன நிலையில் இன்று ரஜினி, விஜய் ரசிகர்கள் இணைந்து இயக்குனர் ராஜூ முருகனை சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனையடுத்து ராஜூமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராஜூமுருகன், அந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சீமானுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி 'யார் யாரோ சூப்பர் ஸ்டார், இளைய தளபதி எல்லாம் இருக்கும் போது நம்ம பிள்ளைக்கு ஒரு பட்டம் வைத்துவிடுங்கள். ஒரு இடதுசாரி தகப்பன் வளர்க்கும் பிள்ளை எப்படியிருப்பான் என்பதற்கு புகழ் ஒரு உதாரணம். அவன் திரைப்படத்தை மிகத்தீவிரமாக நேசிக்கக் கூடியவன். நிச்சயம் புகழ்மிக்க நடிகனாக அவன் மாறுவான்” என்று பேசியிருந்தார்.
சூப்பர் ஸ்டார் பட்டமும், இளையதளபதி பட்டமும் ஒரே நாளில் கிடைத்த பட்டங்கள் அல்ல என்றும், ரஜினி, விஜய் ஆகிய இருவரும் கடந்த பல ஆண்டுகளாக உழைத்த உழைப்பிற்கு கிடைத்த பட்டங்கள் என்றும் இரண்டு படம் எடுத்த இயக்குனருக்கு இது தெரிய வாய்ப்பில்லை என்றும் ரஜினி, விஜய் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து கொந்தளித்தனர்.
இதனையடுத்து “ஒரு இசை வெளியீட்டு நிகழ்வில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் உற்சாகப்படுத்துவதற்காக பேசப்பட்ட விசயம் அது. வார்த்தைகள் தவறாக அமைந்ததற்கு வருந்துகிறேன் என்றும், ரஜினி அவர்களும், விஜய் அவர்களும் தங்களது உழைப்பால், அர்ப்பணிப்பால் தமிழ் சினிவாவின் இந்த உச்சங்களைத் தொட்டவர்கள்.கலைத்துறையில் அவர்களது பங்களிப்பின் மேல் உயர்ந்த மரியாதை எப்போதும் எனக்கிருக்கிறது! என்றும் கூறி இந்த பிரச்சனைக்கு ராஜூமுருகன் முற்றுப்புள்ளி வைத்தார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments