இயக்குனர் ராஜூ முருகனின் அடுத்த பட அறிவிப்பு.. ஆனாலும் ஒரு ட்விஸ்ட்..!

  • IndiaGlitz, [Monday,October 02 2023]

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ’ஜப்பான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் ராஜூ முருகனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜு முருகன் மற்றும் எஸ்பி சினிமாஸ் நிறுவனம் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளராக மட்டும் ராஜூ முருகன் இருப்பார் என்றும் இந்த படத்தை இயக்குவது அறிமுக இயக்குனர் எழில் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சீன் ரோல்டான் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் ஷாம் ஆர்டிஎக்ஸ் படத்தொகுப்பு பணியை ஏற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பாடல்களை உமாதேவி எழுத இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.