'ஜோக்கர்' இயக்குனருக்கு கிடைத்த அடுத்த வாழ்த்துக்கள்
Tuesday, September 6, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் அரசியல் நையாண்டி படம் வெளியாகி பல வருடங்கள் ஆன நிலையில் சமீபத்தில் வெளிவந்த ராஜூமுருகனின் 'ஜோக்கர்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அரசியல் நையாண்டி படமாக இருந்தாலும் பல அரசியல்வாதிகள் இந்த படத்தை பார்த்து, ராஜூமுருகன் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர்
இந்நிலையில் திரையுலகில் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த ராஜூமுருகனின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதுதான் அவருடைய திருமணம். தனது நீண்ட நாள் தோழியும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஹேமா சின்ஹா என்பவரை ராஜூமுருகன் சென்னை பெசண்ட் நகர் அறுபடை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமண நிகழ்ச்சியில் ராஜூமுருகனின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக 'ஜோக்கர்' படத்தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பிரபல இயக்குனர்களான பாலா, லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment