இயக்குனர் ராஜூமுருகன் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Wednesday,May 26 2021]

’குக்கூ’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான பிரபல பத்திரிகையாளர் ராஜுமுருகன் அதன்பின் ’ஜோக்கர்’ மற்றும் ’ஜிப்ஸி’ ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இவருடைய சகோதரர் நடிகர் மற்றும் பத்திரிக்கையாளரான குமரகுருபரன் இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மற்றும் ஊடகவியலாளரான குமரகுருபரன் ஒரு சில திரைப்படங்களில் நடித்தது மட்டுமின்றி புதிய தலைமுறை, நியூஸ் 18 உள்ளிட்ட ஊடகங்களில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது

குமரகுருபரன் அவர்களின் இழப்பு திரைத்துறை மற்றும் ஊடகத் துறைக்கு பேரிழப்பு என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் ராஜூமுருகன் வீட்டில் நிகழ்ந்த இந்த சோக நிகழ்வை அடுத்து திரையுலகினர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்