விமர்சனம் செய்யுங்கள், ஆனால் கொலை மிரட்டல் எல்லாம் கண்டிக்கத்தக்கது: 'ஜெய்பீம்' குறித்து பிரபல இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா நடித்து தயாரித்த ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இன்னொரு பக்கம் இந்த படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக பாமக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் ‘ஜெய்பீம்’ படத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சூர்யாவுக்கு ஒருசில அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி கொலை மிரட்டல் விடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன என்பதும் குறிப்பாக பாரதிராஜா, வெற்றி மாறன் உள்ளிட்டோர் தங்களுடைய சமூக வலைதளங்களில் சூரியாவுக்கு ஆதரவை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ்மேனன் இதுகுறித்து கூறியதாவது: ஜெய் பீம்’ மிக முக்கியமான படம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் சட்டக் கட்டமைப்பிற்குள் எவ்வாறு நீதி வழங்கப்படுகிறது என்பதைக் காட்டி அனைவருக்கும் நம்பிக்கையை அளிக்கிறது. எனவே ‘ஜெய் பீம்’ பாருங்கள். ஒரு படத்தை விமர்சிப்பது சரிதான். ஆனால், அப்படத்துக்குத் தடை கோருவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் கண்டிக்கத்தக்கது''.
Jai Bhim is an important film, it also show how justice is delivered within the constitutional framework to the marginalised and gives hope to to one and all. So watch Jai Bhim.again To critique the film is fine but demand a ban and issue death threats is condemnable pic.twitter.com/xDr4c1VIN5
— Rajiv Menon (@DirRajivMenon) November 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com