நடிகராக பிஸியாகும் ராஜீவ் மேனன்.. அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமா?

  • IndiaGlitz, [Thursday,April 27 2023]

தமிழ் திரையுலகின் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ராஜீவ் மேனன், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தில் நடித்திருந்த நிலையில் அவருக்கு அடுத்தடுத்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வருவதாகவும் இதனால் அவர் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பம்பாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ராஜீவ் மேனன். இதனை அடுத்து மணிரத்தினம் இயக்கிய ’குரு’ ’கடல்’ உள்பட பல ஒரு சில திரைப்படங்களுக்கு அவர் ஒளிப்பதிவு செய்தார். அதுமட்டுமின்றி ’மின்சார கனவு’ ’கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்’ ’சர்வம் தாளமயம்’ ஆகிய படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ’விடுதலை’ படத்தில் ராஜீவ் மேனன் நடித்திருந்தார் என்பதும் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. குறிப்பாக வசந்த் ரவி நடிப்பில் உருவாகி வரும் 'வெப்பன்’ என்ற திரைப்படத்தில் ராஜீவ் மேனன் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாகவும் அதுமட்டுமின்றி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க உள்ள திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஒரு சில தெலுங்கு இயக்குனர்களும் ராஜீவ் மேனனை தங்கள் படங்களில் நடிக்க அணுகி வருவதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ் திரை உலகில் பாரதிராஜா உட்பட பல இயக்குனர்கள் நடிகர்களாக பிஸியாகி உள்ள நிலையில் அந்த பட்டியலில் ராஜீவ் மேனன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.