விக்ரம்-அக்சராஹாசன் படம் குறித்து ராஜேஷ் செல்வா

  • IndiaGlitz, [Tuesday,April 24 2018]

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் மற்றும் அக்சராஹாசன் நடிக்கும் படம் ஒன்றின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கோலிவுட் ஸ்டிரைக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஒரு எமோஷனல் த்ரில்லருடன் கூடிய கதையம்சம் கொண்ட படம் என்றும், அதுமட்டுமின்றி இந்த படம் ஒரு பக்கா கமர்ஷியல் படம் என்றும் இந்த படத்தின் இயக்குனர் ராஜேஷ் செல்வா தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.