close
Choose your channels

குடியும் குடித்தனமும்' டைட்டிலுக்கு மறுப்பு தெரிவித்த எம்.ராஜேஷ்

Thursday, August 27, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் எம்.ராஜேஷ் இயக்கிய 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க' திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தில் ஜீவா நடிப்பதாகவும், அந்த படத்தின் டைட்டில் 'குடியும் குடித்தனமும்' என்றும் தகவல்கள் வந்தன. இந்த தகவலை எம்.ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் மறுத்துள்ளார். "இன்னும் நான் அடுத்த படத்தின் ஸ்கிரிப்டையே தயார் செய்யவில்லை. பின் எவ்வாறு டைட்டிலை தேர்வு செய்திருப்பேன். கண்டிப்பாக என்னுடைய அடுத்த படத்தின் டைட்டில் 'குடியும் குடித்தனமும்' கிடையாது. ஜீவா தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்களை முடித்த பிறகு நான் அவருடன் என்னுடைய அடுத்த படம் குறித்து ஆலோசனை செய்வேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் ராஜேஷின் படங்களில் அதிகளவு மது குடிக்கும் காட்சிகள் வருவது குறித்து அவர் கூறியதாவது: "தற்போது வெளிவரும் பெரும்பாலான தமிழ்ப் படங்களில் மது குடிக்கும் காட்சிகள் வருகின்றன. ஹீரோவே கையில் மதுபாட்டில்களை வைத்து கொண்டு டான்ஸ் ஆடுவது போன்ற பல காட்சிகள் பல படங்களில் வருகின்றன. இந்நிலையில் என்னுடைய படங்களில் வரும் காட்சிகளை மட்டும் விமர்சனம் செய்வது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை என்னுடைய படங்களில் வரும் காட்சிகள் பிரபலமாகிவிடுவதால் இம்மாதிரியான விமர்சனங்கள் வருவதாக நினைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

ராஜேஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அந்த படத்தில் ஜீவா மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும், நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment