அவர் கிரிக்கெட்டுக்கும் மட்டும் 'தல' அல்ல: கமல், விக்ரம் பட இயக்குனர் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
கூல் கேப்டன், மேட்ச் ஃபினிஷர், சிறந்த கேப்டன்ஷிப், அதிரடி பேட்ஸ்மேன் உள்பட பல பெருமைக்கு சொந்தக்காரரான 'தல' தோனி, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியை கிட்டத்தட்ட தனி ஆளாக கரையேற்றி வருகிறார்.
அவருடன் ஒரே ஒரு போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என்பது கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்நாள் ஆசையாக கூட உள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் தல தோனியின் ரசிகர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'தூங்காவனம்' மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம். செல்வா, தல தோனியுடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் சற்றுமுன் பதிவு செய்துள்ளார்.
ஒரு மிகப்பெரிய மனிதரின் அருகில் நின்று புகைப்படம் எடுத்ததை பெருமையாக கருதுவதாகவும், அவர் கிரிக்கெட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஒரு உதாரணமாக திகழ்பவர் என்றும் ராஜேஷ் எம்.செல்வா குறிப்பிட்டுள்ளார்.
It felt great just standing next to this solid personality. The Man who is a greatest inspiration not only to the cricketing world but to all. Truly #CaptainCool #MSD #Mahi ❤️❤️❤️ ?? ?? pic.twitter.com/XUwsCIJr56
— RMS (@RajeshMSelva) April 29, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments