close
Choose your channels

'தூங்காவனம்' 'Sleepless Nights' படத்தின் ரீமேக் அல்ல. ராஜேஷ் எம்.செல்வா

Wednesday, September 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கமல், த்ரிஷா, மதுமிதா, பிரகாஷ்ராஜ், ஜிப்ரான், ராஜேஷ் எம்.செல்வா மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்த படம் பிரெஞ்ச் திரைப்படமான "Sleepless Night" படத்தின் ரீமேக் என இதுவரை செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இந்த தகவலை படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா மறுத்துள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா கூறியதாவது, "தூங்காவனம் திரைப்படம் "Sleepless Nights" படத்தின் ரீமேக் அல்ல. இந்த படம் பிரெஞ்ச் நாட்டின் சிறுகதை ஒன்றை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் திரைக்கதையை கமல் எழுதியுள்ளார்' என்று கூறியுள்ளார்.

இன்று சரியாக 4.21 மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. இந்த தகவலை ஏற்கனவே நடிகை கெளதமி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் சம்பத், ஆஷா சரத், உமா ரியாஸ்கான், யூகிசேது, மதுஷாலினி, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தை சுமார் ரூ.50 கோடி செலவில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment