கமலின் 'சபாஷ் நாயுடு' படத்தில் 'தூங்காவனம் ராஜேஷ் எம்.செல்வா
Sunday, May 15, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் அவரது மகள் ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் கமல் படத்திற்கு இசையமைக்கின்றார் இசைஞானி இளையராஜா
இந்த படத்தின் 80% படப்பிடிப்பு அமெரிக்காவிலும் மீதி இந்தியாவிலும் நடைபெறவுள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க 'தூங்காவனம்' படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
'சபாஷ் நாயுடு' படத்தை அடுத்து கமல் நடிக்கவுள்ள அடுத்த படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கவுள்ளதாக செய்திகள் செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகியாகவும் அவர் பணிபுரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment