கமலின் 'சபாஷ் நாயுடு' படத்தில் 'தூங்காவனம் ராஜேஷ் எம்.செல்வா

  • IndiaGlitz, [Sunday,May 15 2016]
உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் அவரது மகள் ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் கமல் படத்திற்கு இசையமைக்கின்றார் இசைஞானி இளையராஜா

இந்த படத்தின் 80% படப்பிடிப்பு அமெரிக்காவிலும் மீதி இந்தியாவிலும் நடைபெறவுள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க 'தூங்காவனம்' படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
'சபாஷ் நாயுடு' படத்தை அடுத்து கமல் நடிக்கவுள்ள அடுத்த படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கவுள்ளதாக செய்திகள் செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகியாகவும் அவர் பணிபுரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜி.வி.பிரகாஷுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி

இசையமைப்பாளரான ஜிவி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'...

காவல்துறையில் ஜி.வி.பிரகாஷ் கொடுத்த திடீர் புகார்

திரையுலகிற்கு பெரிய தலைவலியாக இருக்கும் ஒரே பிரச்சனை திருட்டு டிவிடி. இந்த பிரச்சனைக்கு எப்படி முடிவு காண்பது என்று தெரியாமல் திரையுலகினர் திண்டாடி வருகின்றனர்....

அடுத்த மாதம் ரிலீஸாகும் ஜிவி பிரகாஷ் படம்

கடந்த வெள்ளியன்று ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான 'பென்சில்' திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்...

அஜித் படத்தில் இவரா வில்லன்?

அஜித்தின் 'வேதாளம்' படத்தில் வில்லனாக நடித்த கபீர்சிங் தற்போது விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 'றெக்க' படத்தின் வில்லன் ஆனார்...

விக்ரம்பிரபுவின் 'வீரசிவாஜி'யில் இணைந்தார் சிம்பு

சமீபத்தில் சிம்பு இசையமைத்து பாடிய ஓட்டு பாடல் தேர்தல் நேரத்தில் இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களிடமும் பெரும்...