பலத்த சூரைக்காற்றால் விழுந்த மரம்: பிரபல இயக்குனரின் கார் சேதம்!

வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதியில் நேற்றிலிருந்து கனமழை பெய்து வருகிறது

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் ஒருசில வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து விட்டது. அது மட்டுமின்றி சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் இந்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன

மேலும் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் ஒரு சில இடங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் மீது மரங்கள் விழுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கண்ணன் அவர்களின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவருடைய விலையுயர்ந்த காரின் மீது ஒரு பெரிய மரம் விழுந்ததால் அந்த கார் சேதம் அடைந்து உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது