ஒரு வருடத்திற்கு இனி தியேட்டரின் நிலை இதுதான்: பிரபல தயாரிப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் வரும் 17ஆம் தேதி ஊரடங்கு வாபஸ் பெற்றாலும் அதன் பின்னரும் திரையரங்குகள் திறப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது. தனிமனித இடைவெளியை இன்னும் சில மாதங்களுக்கு கடைபிடிக்க வேண்டும் என்பதால் அது திரையரங்குகளில் சாத்தியமா என்பது கேள்விக்குறியே. குறிப்பாக இடைவேளையின்போது தியேட்டரில் தனிமனித இடைவெளி காற்றில் பறக்கவிட வாய்ப்பிருப்பதால் திரையரங்குகள் தற்போது திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் இதுகுறித்து கூறியதாவது: ஊரடங்கு சட்டம் வாபஸ் ஆன பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பெரிய அளவில் வசூல் ஆகாது. தியேட்டர்களுக்கு பொதுமக்கள் வர பயப்படுவார்கள். அவர்களுக்கு முழுமையாக பயம் நீங்குவதற்கு ஒரு வருடம் ஆகும் என்கிறார்கள். தியேட்டர்களில் வசூல் குறைந்தால், அது தயாரிப்பாளர்களையும் பாதிக்கும். உதாரணத்துக்கு, ரூ.75 கோடி வசூல் செய்யும் ஒரு பெரிய கதாநாயகனின் படம், ரூ.45 கோடிதான் வசூல் செய்யும். தியேட்டர்களுக்குப் போய் படம் பார்க்கும் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இணையதளங்களில் படம் பார்ப்பவர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். சினிமா, இன்னொரு பெரிய சவாலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இயக்குனர், தயாரிப்பாளர் கேயாரின் கூற்று உண்மையெனில் இனி பெரிய நடிகர்களின் படங்கள் ரூ.200 கோடி, ரூ.300 கோடி என பிரமாண்ட வசூலை பெறுமா? என்பது கேள்விக்குறியே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com