ஜெயமோகனின் உள்நோக்கம் என்ன? 'மஞ்சும்மெல் பாய்ஸ்' விமர்சனத்திற்கு பிரபல இயக்குனர் பதிலடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஜெயமோகன் சமீபத்தில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில் அவருக்கு மலையாளத் திரை உலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரபல மலையாள எழுத்தாளர் உண்ணி என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜெயமோகன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் தற்போது மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் தனது ஜெயமோகனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ குறித்து விமர்சனம் செய்த ஜெயமோகன் மலையாள பொறுக்கிகள் என்றும் குடிகாரர்கள் என்றும் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தை பார்க்கும்போது தனக்கு எரிச்சலாக வருகிறது என்றும் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள இயக்குனர் பிரியதர்ஷன் ’ஜெயமோகன் இந்த படத்தின் மையக் கருத்தான நட்பு என்பதை பற்றி புரிந்து கொள்ளவே இல்லை என்று தெரிகிறது. ஒரு பாட்டில் ஆல்கஹாலுக்குள் இந்த படத்தின் கதையை அடக்க அவர் முயற்சி செய்திருக்கிறார், அது சரியானது இல்லை. ஜெயமோகன் இந்த படத்தை விமர்சனம் செய்ததன் உள்நோக்கம் என்ன என்பது குறித்த கேள்வி எனக்கு எழுகிறது என்று தெரிவித்துள்ளார்
மேலும் ஜெயமோகன் தனது விமர்சனத்தில் கவனிக்காத நட்பின் ஆழத்தை தான் இந்த படம் வலியுறுத்துகிறது. மது அருந்துபவர்கள் அனைவரும் கெட்டவர்கள் இல்லை, மதுவை தவிர்ப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை, மது அருந்துவது என்பது அவரவர் விருப்பத்தை பொருத்தது’ என்றும் கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments