'மெய்யழகன்' இயக்குனர் பிரேம்குமாரின் அடுத்த படம்.. ஆச்சரியம் அடைந்த கார்த்தி..!

  • IndiaGlitz, [Monday,October 07 2024]

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’, கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த ’மெய்யழகன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்குனர் பிரேம்குமார் இயக்கி உள்ள நிலையில், இரண்டு படங்களுமே உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்த படம் என்பதைக் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அடுத்ததாக இயக்குனர் பிரேம்குமார் வரலாற்று திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ’மெய்யழகன்’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, ’மெய்யழகன்’ படம் வெளியான பிறகு பலரிடம் உரையாடல் குறித்த விவாதத்தை தொடங்கியுள்ளது. அந்த அளவுக்கு உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர் பிரேம்குமார்.

அடுத்ததாக, அவர் ஒரு வரலாற்று கதை வைத்திருக்கிறார்; அதன் எழுத்து நடையை நான் படித்து முடித்ததும் யார்ரா நீ? என்ற மரியாதை போய் அவரிடம் எனக்கு உரிமையே வந்துள்ளது. அந்த கதையை அவர் எப்போது எழுதி முடிப்பார் என்பதை நான் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார் கார்த்தி.

இந்த தகவலின் அடிப்படையில், இயக்குனர் பிரேம்குமார் அடுத்த படம் வரலாற்று கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

யாரும் எதிர்பாராத டிவிஸ்ட்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த குக் வித் கோமாளி ஸ்ருதிகா..!

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நேற்று தொடங்கியது. இந்நிலையில், நேற்று தான் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 18 தொடங்கியது என்பதும், இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி

என் பெட்-ஐ உங்களுக்கு கொடுத்துடறேன்.. 4 வாரம் நாமினேஷன் பண்ணாதிங்க: பேரம் பேசிய ஜாக்குலின்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், முதல் நாளே ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் இடத்தில் பிரச்சனை ஏற்பட்டது, ஜாக்குலின் புலம்பல்

ஹை ஸ்பீடில் கார்த்திக் சுப்புராஜ்.. 'சூர்யா 44' படம் குறித்த ஆச்சரிய தகவல்..!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் தெருவில் ஜாலி வாக்கிங் செய்த அஜித் - ஷாலினி.. ரொமான்ஸ் வீடியோ..!

நடிகர் அஜித் தற்போது படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு, ஸ்பெயின் தெருக்களில், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி நடந்து செல்லும் செல்பி வீடியோ தற்போது இணையத்தில்

வந்த அடுத்த நாளே வெளியேறும் போட்டியாளர்.. இன்று எலிமினேஷன் ஆவது யார்?

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், இன்று ஒருவர் எலிமினேஷன் ஆகப் போவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.