'கே.ஜி.எஃப் 2' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Friday,August 20 2021]

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான ’கே.ஜி.எஃப் 2’ தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த ஜூலை மாதம் ரிலீசாக இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’கே.ஜி.எஃப் 2’ படத்தின் திரையரங்கு ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் பெற்றுள்ளதாக இந்த படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல், அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எனவே தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் ஜீ தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது

யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், சஞ்சய்தத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவிபஸ்ரூர் என்பவர் இசையமைத்துள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் சுமார் 120 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாகவும், இந்தப் படம் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் மிகப் பெரிய வெற்றி அடையும் என்றும் கூறப்படுகிறது.