வடபழனி முருகன் கோவிலில் திரைப்பட இயக்குனருக்கு திருமணம்.. மணமகள் எம்.இ.பட்டதாரி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட இயக்குனர் சென்னை வடபழனி முருகன் கோயிலில் எம்இ பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் பிரபு ஜெயராம். ஆர்எஸ் கார்த்திக், ஆர்யா, சௌந்தர்யா, ஜூனியர் பாலையா, ரோகினி, பகவதி பெருமாள் உள்பட பல நடித்த இந்த படம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் உள்பட பல சர்ச்சைக்குரிய விஷயங்களை அலசியது என்பதும் இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இயக்குனர் பிரபு ஜெயராம் எம்.இ.பட்டதாரி மற்றும் கல்லூரி பேராசிரியை தாபா என்பவரை சென்னை வடபழனி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துனர். குறிப்பாக அருண்பாண்டியன், விஜய் ஆண்டனி, மன்சூர் அலிகான், வடிவுக்கரசி, சிபி ராஜ் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இயக்குனர் பிரபு ஜெயராம் ஃபேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாக இருக்கும் ஒரு திரைப்படத்தை விரைவில் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments