சிம்பு பட நாயகியுடன் திருமணமா? பிரபல இயக்குனர் விளக்கம்!

  • IndiaGlitz, [Sunday,August 21 2022]

சிம்பு அறிமுகமான படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் பிரபல இயக்குனருடன் காதலில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அந்த இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சிம்பு ஹீரோவாக அறிமுகமான ’காதல் அழிவதில்லை’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சார்மி. இதனையடுத்து ’காதல் கிசுகிசு’, ‘லாடம்’, ‘ஆஹா எத்தனை அழகு’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார்.

தெலுங்கு திரை உலகில் பல பிரபலங்களுடன் நடித்த இவர் தற்போது தெலுங்கில் சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் சார்மி கவுர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சார்மி மற்றும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகிய இருவரும் சேர்ந்து சில படங்களை தயாரித்து வரும் நிலையில் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் தெலுங்கு திரை உலகில் கிசுகிசுக்கள் பரவிவருகின்றன .

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குநர் பூரி ஜெகன்நாத், சார்மி எனக்கு பல விஷயங்களில் ஆதரவாக இருக்கிறார் என்றும் எனக்கு 13 வயதில் இருந்தே அவரை தெரியும் என்றும் 20 ஆண்டுகளாக அவருடன் சேர்ந்து பயணித்து வருகிறேன் என்றும் அவர் எனக்கு நல்ல சினேகிதன் என்றும் எங்கள் இருவருக்கும் அதைத் தாண்டி வேறு எந்த உறவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

50 வயது பெண்ணுடன் சேர்ந்து படம் தயாரித்தால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்றும் சார்மி இன்னும் இளமையான பெண்ணாக இருப்பதால்தான் எங்கள் இருவரையும் இணைத்து தவறாக பேசுகின்றார்கள் என்றும் காதல், கவர்ச்சி எல்லாம் கொஞ்ச நாட்கள் தான் இருக்கும் ஆனால் நட்பு மட்டுமே நிரந்தரமாக இருக்கும் என்றும் இயக்குனர் பூரி ஜெகந்நாத் தெரிவித்துள்ளார்.