உங்களை மாதிரி ரசிகர்கள் கிடைக்க விஜய் கொடுத்து வச்சிருக்கணும்: பிரபல இயக்குனர் பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்துக்கு எப்போதும் இயற்கைப் பேரிடர் வந்தாலும் முதல் நபராக சமூக சேவை செய்து பொதுமக்களுக்கு உதவி செய்வது விஜய் ரசிகர் தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே புயல், வெள்ளம் உட்பட பல இயற்கைப் பேரிடரின்போது களத்தில் இறங்கி விஜய் ரசிகர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்துள்ளனர் என்ற செய்தியை பார்த்துள்ளோம்.
இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பின்போது விஜய் ரசிகர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஈசிஆர் சரவணன் என்பவர் செய்யும் சேவையை பாராட்டி பிரபல இயக்குனர் பேரரசு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் விஜய் மன்ற தலைவராக இருக்கும் ஈசிஆர் சரவணன் அவர்களின் சேவையை நான் அவ்வப்போது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் பார்த்து வருகிறேன். வெள்ளம், மழை, புயல் நேரத்திலும் இந்த கொரோனா நேரத்திலும் முதலில் இறங்கி உதவி செய்வது நீங்கள் தான். உங்களை போன்ற ரசிகர்கள் கிடைக்க விஜய் அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கு சேவை செய்யும் விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ மற்றும் ‘சிவகாசி’ ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குனர் பேரரசு, விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
#நேற்றைய_தினம்_முகநூல் நேரலையில் வந்து
— Dr.ECR.P.Saravanan (@Dr_Ecr_official) April 16, 2020
அன்போடு என்னை தம்பியென புகழ்ந்து கூறிய தளபதி @actorvijay யின் சிவகாசி திருப்பாச்சி வெற்றிப்பட இயக்குனர் @ARASUPERARASU அவர்களுக்கு நன்றிகள்! pic.twitter.com/gzZown5aVP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments