இந்த எண் ஒரு மந்திரமாக இருக்கட்டும்: முதல்வருக்கு நன்றி தெரிவித்த அஜித்-விஜய் இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
முதல்வர் அறிவித்த தொலைபேசி எண் ஒரு மந்திரமாக இருக்கட்டும் என அஜித், விஜய் படங்களை இயக்கிய இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவதை அடுத்து நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்படும் பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோளில், ‘பெண் குழந்தைகள் தங்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் 1098 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், ரகசியம் காத்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மகளிர் உரிமை துறைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது என்றும், முதலமைச்சராக மட்டுமன்றி ஒரு தந்தையாகவும் உங்களை காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்றும், தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
இதயப்பூர்வ நன்றி முதல்வரே!
உங்கள் உணர்வோடு அதிகாரிகளும் ஒன்றி செயல்பட்டால் நிச்சயம் பாலியல் பயங்கரவாத்திலிருந்து பெண்ணினம் காக்கப்படும்!
1098 1098 1098 1098 1098. 1098
இந்த எண் மகளிர் காக்கும்
மந்திரமாக இருக்கட்டும்!
நன்றி! நன்றி!! நன்றி
விட்ராதிங்க முதல்வரே!!!
இயக்குனர் பேரரசு அஜித் நடித்த திருப்பதி, விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதயப்பூர்வ நன்றி முதல்வரே!
— PERARASU ARASU (@ARASUPERARASU) November 26, 2021
உங்கள் உணர்வோடு அதிகாரிகளும் ஒன்றி செயல்பட்டால் நிச்சயம் பாலியல் பயங்கரவாத்திலிருந்து பெண்ணினம் காக்கப்படும்!
1098 1098 1098 1098 1098. 1098
இந்த எண் மகளிர் காக்கும்
மந்திரமாக இருக்கட்டும்!
நன்றி! நன்றி!! நன்றி
விட்ராதிங்க முதல்வரே!!! pic.twitter.com/BjI89R4Net
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com